ஆன்லைன் மூலம் வீடியோ எடிட் செய்ய உதவும் அசத்தல் இணையதளம்.
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை எடிட் செய்ய வேண்டுமானால் வீடியோ எடிட்டிங் மென்பொருள் வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக வீடியோ எடிட்டிங் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.ஒரு சில வீடியோக்களை தான் எடிட் செய்ய வேண்டும் இதற்காக பெரிய தொகைக்கு வீடியோ எடிட்டிங் மென்பொருள் எல்லாம் வாங்க வேண்டாம், ஆன்லைன் மூலம் இத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் வீடியோக்களை எளிதாக இலவசமாக எடிட் செய்யலாம்.

இணையதள முகவரி :http://videotoolbox.com
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவசப்பயனாளர் கணககு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். வீடியோவை ஆடியோவாக மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் வீடியோவிற்கு ஆடியோ மாற்ற வேண்டும்,வீடியோவில் தேவையான பகுதியை வெட்ட சேர்க்க, வீடியோவீடியோவிற்கு வாட்டர்மார்க்கிங் (Water Marking) சேர்க்க, வெப் கேமிரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை எடிட் செய்து விரும்பிய ஃபார்மெட்டு மாற்றலாம் இப்படி வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்யும் அத்தனை சேவைகளையும் நாம் இத்தளத்தின் மூலம் செய்யலாம். 600 MB வரை உள்ள கோப்புகளை நாம் பயன்படுத்தலாம். எல்லா சேவைகளையும் இலவசமாகவே இத்தளம் கொடுக்கிறது, யூடியுப்-ம் வீடியோ கோப்புகளை எடிட் செய்யும் சேவையை கொடுக்கிறது. யூடியுப் காட்டிலும் இதில் சேவைகளை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. ஆன்லைன் மூலம் வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
