| 09/05/2008 |
Computer Tips |
|
Ms Word ல் எவ்வாறு Autotext ஐ பயன்படுத்தி வேலைகளை இலகுவான முறையில் செய்தல் Ms Word ல் நீண்டவாக்கியங்கள் அல்லது நீங்கள் அடிக்கடி பாவிக்கும் நீண்ட சொற்கள் போன்றவற்றை இலகுவான முறையில் எவ்வாறு கொண்டுவருவதென்று பார்ப்போம் Word Programme திறவுங்கள் உதாரணமாக நீங்கள் உங்கள் விலாசத்தை டைப் செய்யுங்கள்
படம் 3 ல் நீங்கள் டைப்செய்தவிலாசத்தை தெரிவுசெய்யுங்கள் பின்னர் மெனுபாரில் Einfügen/AutoText/Neu என்பதனைத்தெரிவுசெய்க படம் 2 கிடைக்கும்
இப்பொழுது உங்களுக்கு தேவைப்படும்போது எவ்வாறு நீங்கள் கொடுத்த விலாசத்ததை வரவளைப்பது அதற்கு படம் 3 ல் மெனுபாரில் Einfügen/AutoText/Standard /Kandasamy Ravi தெரிவுசெய்யும்போது நீங்கள் கொடுத்த விலாசத்தை பெற்றுக்கொள்ளலாம்
இவ்வாறு ஏற்கனவே AutoText ல் கொடுக்கப்பட்டுள்ளவற்றை பயன்படுத்தி உங்கள்வேலையை இலகுபடுத்தலாம ( உ+ம் Anrede, Betreffzeile, Grußformel Exc.) (கொடுத்தவற்றை அழிக்க படம்4 ல் உள்ளவாறுகிளிக்செய்யுங்கள் படம் 7 கிடைக்கும் அதில் Autotext ஐ தேர்ந்தெடுங்கள் அழிக்கவேண்டிய Kandasamy Ravi என்பதை கிளிக்செய்யுங்கள் Löschen கிளிக்செய்யும்போது அழிக்கப்படும்)
இவற்றை விட இலகுவான வழி AutoKorrektur மூலமும் செய்யலாம் நீங்கள் விலாசத்தைடைப்செய்து படம் 4 ல் உள்ளவாறு Einfügen/AutoText/Autotext தெரிவுசெய்யும்போது படம் 5 கிடைக்கும்
படம் 5 ல் AutoKorrektur என்பதனைத்தெரிவுசெய்க நீங்கள் தெரிவுசெய்த விலாசம் வலதுபக்கத்தில் உள்ளதை காண்கின்றீர்கள் Ersetzen என்றபகுதியில் நீங்கள் கொடுத்த விலாசத்தைப்பெற நீங்கள் விரும்பிய சுருக்க எழுத்தை கொடுங்கள் (உ+ம் படம் 5 ல் ad என்று கொடுத்துள்ளேன்) பின்னர் Hinzufügen கிளிக்செய்து Ok செய்க
Word Programme திறவுங்கள் நீங்கள் கொடுத்த விலாசம் வரவேண்டுமெனில் ad டைப் செய்து Spacebar அல்லது Enter அழுத்தும்போது விலாசத்தைப்பெறலாம் (இவ்வாறு நீங்கள் நீண்டவாக்கியங்கள் அல்லது படங்கள் சிம்போல் போன்றவற்றுக்கு AutoText கொடுத்து வைக்கலாம்) நீங்கள் கொடுத்த Autotext தேவையில்லையெனில் எவ்வாறு அழித்தல் படம் 4 ல் உள்ளவாறு Einfügen/AutoText/Autotext தெரிவுசெய்யும்போது படம் 6 கிடைக்கும் அதில் AutoKorrektur தெரிவுசெய்க அதில் அழிக்க வேண்டிய உ+ம் ad வரிசையைத்தெரிவுசெய்க பின்னர் Löschen கிளிக்செய்யும்போது அழிக்கப்படும்
|
|