22/05/2007

Computer Tips


உங்களுக்கு வேண்டாத நபர் உங்களுக்கு அண்மையில் வரும்போது நீங்கள் கணினியில் செய்யும்வேலைகளை மறைக்க Bildschirmschoner (Screen Server) ஐ எவ்வாறு ஓடவிடலாம்

நீங்கள் கணினியில் முக்கியமான வேலைகள் செய்துகொண்டிருக்கும்போது உங்களுக்கு வேண்டாதநபர் உங்களுக்கண்மையில்வரும்போது நீங்கள் செய்கின்ற வேலைகளைப்பார்க்காதவாறு எவ்வாறு Screen Server ஐ ஓடவிடலாம் என்று பார்பபோம்
 

  • Arbeitplatz ல் வலதுகிளிக்செய்யும்போது வரும் சிறிய மெனுவில் படம் 1 ல் உள்ளவாறு Explorer தெரிவுசெய்க

    படம்1

     
  • படம் 1 ல் உள்ளவாறுகிளிக்செய்யும்போது Explorer கிடைக்கும் அதில் இடதுபாலத்தில் உள்ள முறையே (C:/Wndows/system32) கிளிக்செய்க அல்லது Arbeitplatz திறந்து C கிளிக்செய்து பின்னா Window கிளிக்செய்து System32 கிளிக்செய்க (சில வேளைகளில் உங்கள் வின்டோஸ் வேறு Drive ல் பதிந்து இருக்கலாம் அந்த Drive ல் windows/Syestem32 என தெரிவுசெய்க)
     
  •  System32 ல் Bildschirmschoner உள்ளது அவற்றில் விரும்பிய Bildschirmschoner வலதுகிளிக்செய்க அப்போது படம் 2 ல் உள்ளவாறு சிறியமெனு கிடைக்கும் அதில் Kopieren என்பதனைக்கிளிகிளிக்செய்க (அல்லது படம் 2 ல் உள்ள எதாவது Bildschirmschoner வலது கிளிக்செய்து அழுத்தியவண்ணம் இழுத்துவந்து Desktop ல் விடும்போது Hierher Kopieren தெரிவுசெய்யலாம்)
     
  • படம் 2 Kopieren செய்தபின்னர் எல்லாவின்டோக்களை மூடிவிட்டு Desktop ல் வலது கிளிக்செய்து வரும் மெனுவில் படம் 3 ல் உள்ளவாறு Einfügen கிளிக்செய்க

    படம் 2


    படம் 3

     
  • படம் 3 ல் Einfügen கிளிக்செய்யும்போது Desktop க்கு அந்த  Bildschirmschoner படம் 4 ல் உள்ளவாறு வந்துவிடும் அதில் வலது கிளிக்செய்யும்போது வரும்மெனுவில் Verknüpfung Erstellen கிளிக்செய்யும்போது படம் 5 ல்  Verknüpfung கிடைக்கும்

    படம் 4

    படம் 5
     
  • படம் 5 ல் வலதுகிளிக்செய்து வரும்மெனுவில் Eigenschaften ஐ தெரிவுசெய்க படம் 6  கிடைக்கும்

    படம் 6
     
  • படம் 6 ல் Verknüpfung தெரிவுசெய்து அதில் Tastenkombination என்ற பகுதியில் Ctrl அழுத்தியவண்ணம் விரும்பிய எழுத்தை கொடுங்கள் (நாங்கள் B என்று கொடுத்துள்ளோம்)
    (குறிப்பு: ஏற்கனவே கொடுத்த எழுத்து கொடுத்தலாகாது) Ok கிளிக்செய்யுங்கள்

    எனிமேல் உங்களுக்குகு வேண்டாத நபர் உங்களுக்கண்மையில் வரும்போது  Ctrl+Alt+B  Keyboard ஒன்றுசேர அழுத்தும்போது  Bildschirmschoner படம் 7 ல் உள்ளவாறு இயங்கும்



    (மவுசை அசைக்கும்போது அல்லது Keyboard ல் ஏதாவது கட்டையை அழுத்தும்போது பழையநிலைக்கு வரும்)

    (கணினிக்கு புதியவர்களுக்காக சற்று கூடியவிளக்கம் தரப்பட்டுள்ளது வேறுவழிகளிலும் இலகுவாகசெய்யலாம்)