16/4/2008

Computer Tips


உங்கள் கணனியில் இருந்து தேவையில்லாத File களை அழித்து எவ்வாறு கணனியை சுத்தம் செய்வது

நீங்கள் Internet ல் வலைப்பக்கங்களைப் ஒவ்வொருமுறையும் பார்க்கும்போது தானாகவே Temporary Internet Files என்ற அறையினுள் வலைப்பக்கங்கள் பதிவாகின்றன இவ்வாறு ஒவ்வொருநாளும் வாரமும் மாதமும் என பார்க்கும்போது பார்த்தபக்கங்கள் குக்கிகள் நிறுவிய மென்பொருளின் Verknüpfung  போன்றவை உங்கள் கணனியில் உங்களையறியாமலே குப்பைகள் சேருகின்றன இடத்தையும் பிடிக்கின்றன இவற்றை எவ்வாறு உங்கள் கணனியில் இருந்து நீக்குவதென்று பார்ப்போம்

 Temporary Internet Files என்ற அறையிலிருந்து தேவையற்றதை எவ்வாறு நீக்கவதென்று பார்ப்போம்

Internet Explorer த்திறக்கவும் அதில் Extras/ Internetoptionen என்பதனை படம் 1 ல் உள்ளவாறு தெரிவுசெய்யவும்

படம் 1

தெரிவுசெய்யும்போது படம் 2 கிடைக்கும் அதில் Allgemein என்பதனைத்தெரிவுசெய்து Browserverlauf என்றபகுதியில் காணப்படும் Löschen என்பதனைத்தெரிவுசெய்யும்போது படம் 3 கிடைக்கும்

படம் 2

படம் 3 ல் Dateien löschen என்பதனைக்கிளிக்செய்து தற்காலிகமாக உங்கள் கணனியில்சோர்த அனைத்து Datei க்களை அழிக்கலாம் இவ்வாறு Cookies Löschen, Verlauf Löschen , Formular Löschen, Kennwörter போன்றவற்றைத் தனித்தனியாக அழிக்கலாம்

 (Verlauf Löschen என்பததைத்தெரிவுசெய்து அழிக்கும்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த இணையமுகவரிகள் படம் 4 ல் உள்ளவாறு List ல் அழிக்கப்பட்டுவிடும். நீங்கள் நிறைய இணையமுகவரிகளைக்கொடுத்து வைத்ததிருப்பீர்கள் தேவையேற்படும்போது விரைவாக இணையப்பக்கங்ககளுக்கு செல்வீர்கள் ஆகவே தேவையேற்படாவிடின் Verlauf Löschen  தெரிவுசெய்து அழியுங்கள்)

படம் 3

நீங்கள் விரும்பினால் படம் 3 ல் ஒவ்வொன்றாக வாசித்து எல்லாம் தேவையில்லையெனில் Alles Löschen தெரிவுசெய்து எல்லாவற்றையும் அழிக்கலாம்.

படம் 4

நீங்கள் இணையவலைப்பக்கங்களை பார்க்கும்போது உங்களையறியாமல் உங்கள கணனியில் வந்துசேர்ந்த Datei களை நீங்கள் பார்வையிடலாம் தேவையான Datei களை வைத்திருக்கலாம் தேவையில்லாதவற்றை அழிக்கலாம். வேறு அறைக்கு மாற்றலாம்.

அதற்கு படம் 2 ல்  Allgemein என்பதனைத்தெரிவுசெய்து Browserverlauf என்றபகுதியில் காணப்படும் Einstellungen என்பதனைத்தெரிவுசெய்யும்போது படம் 5 கிடைக்கும்

படம் 5

படம் 5 ல் Dateien anzeigen  என்பதனைக்கிளிக்செய்து படம் 6 ல் உள்ளவாறு பார்வையிடலாம். தேவையில்லாத Datei களைத்தெரிவுசெய்து அழிக்கலாம்.

படம் 6

படம் 5 ல் Ordner verschieben தெரிவுசெயது படம் 6 ல் உள்ள Temporary Internet Files வேறு அறைக்கு மாற்றலாம் Objekte anzeigen  தெரிவுசெய்து Download Programs file களைப்பார்வையிடலாம் அழிக்கலாம்

உங்கள் கணனியலிருந்து தேவையில்லாத Datei களை அழிக்க Windows ல் வழி இருக்கின்றது
அதற்கு
Start/Alle Programme /Zubehör/ Systemprogramme /Datenträgerbereinigung என்பதனைத்தெரிவுசெய்தும் தெவையில்லாத Datei களை அழிக்கலாம்

கவயைலைவிடுங்கள் இவற்றைவிட இலகுவான வழியில் உங்கள் கணனியை சுத்தம்செய்ய Registry ல் யை சுத்தம் செய்ய கீழே தரப்பட்டுள்ள இணையசுட்டியை அழுத்தி Easy Cleaner என்பதனை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவி சுத்தம்செய்க

தரவிறக்கம்செய்ய இணையமுகவரி  Download  files/EClea2_0.exe (2,81mb)

Easy Cleaner பற்றிய விபரங்கள் அறிய http://personal.inet.fi/business/toniarts/ecleane.htm

எல்லோருக்கும் புரியக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அழித்தவற்றை தற்காலிகமாக சேமித்துவைப்பதனால் மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்
Registry  ஐ இலகுவாக சுத்தம் செய்யும்

நீங்கள் தரவிறக்கம்செய்து நிறுவியபின் படம் 7 ல் உள்ளதுபோல Easy  Cleaner இருக்கும்

படம் 7

எவற்றை சுத்தம் செய்யவிரும்புகிறர்களோ படம் 7 ல் அவற்றைத்தெரிவுசெய்து சுத்தம்செய்க

பயனுள்ள புறோக்கிறாம் தரவிறக்கம்செய்து பயன்பெறுக நன்றி S.Ananth