22/03/2009

Computer Tips


அழித்த பைல்களை எவ்வாறு மீளக்கொண்டுவருதல்
 
நாம் சில சமயத்தில் நினைவில்லாமல் ஏதாவது பைலை அழித்து விடுவோம். அதை பின்னர் (Papier Korb) ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்துவிடுவோம். ஆனால் சில காலம் கழித்துதான் அந்த பைல் நமக்கு தேவைபடுவது நினைவுக்கு வரும் . அந்த நேரத்தில் ரீசைக்கிள் பின்னில் தேடினாலும் கிடைக்காது.அப்போது அந்த பைல் அவ்வளவு தானா? போனது போனதுதானா என கலங்க வேண்டாம்.

நாம் அழித்த பைல்கள் நமது கணிணியில் உள்ள டிஸ்கில் விண்டோஸ் ஆபரேடிங்சிஸ்டம் விட்டு வைக்கும்.
அந்த பைலில் உள்ள தகவல்கள் அப்படியே நமது HardDisc -ல் அமர்ந்திருக்கும். அந்த பகுதி Hard Disc க்கு தேவைப்பட்டால் மட்டுமே அந்த இடத்தை Hard DIsc எடுத்துக்கொள்ளும்.அந்த பகுதி Hard Disc க்கு தேவைப்படாத வரை நமது பைல் அங்கேயே பத்திரமாக இருக்கும்.
 
சரி நமது பைலை எப்படி மீட்டெடுப்பது.
 
அதற்கு தான் இந்த குட்டி மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த சின்ன மென்பொருள் 300 Kb க்கு உள்ளே இருப்பதால்
கணிணியில் அதிகமான இடத்தைபிடிக்காது.இந்த மென்பொருள் இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 
 

பதிவிறக்கம் செய்து பின்னர் உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள் .பிறகு நீங்கள் அதை திறக்கும்போது உங்களுக்கு படம் 1 ல் உள்ளதுபோல இந்த தளம் திறக்கும்.
 
படம் 1
 
இதில் குறிப்பிட்டுள்ள Drive  வில் நீங்கள் எந்த Drive ல் இருந்து அழித்தீர்களோ அந்த Drive பெயரை குறிப்பிடவும்.
 
அடுத்து நீங்கள் நீக்கிய பைல் எந்த வகையை சார்ந்ததோ அதை குறிப்பிடவும்.

குறிப்பாக

அது வேர்ட் பைலாக இருந்தால் .Doc என்றோ

எக்ஸெல் பைலாக இருந்தால் .xls என்றோ

பெயின் பைலாக இருந்தால் .bmp என்றோ

போட்டோவாக இருந்தால் .Jpeg அல்லது .psd என்றோ குறிப்பிடவும

 
அதுபோல் நீங்கள் பைலுக்கு பெயர் வைத்திருந்தாலும் அந்த பெயரை குறிப்பிடலாம்.
அல்லது அழித்த அனைத்து பைல்களும் அந்த Drive ல் இருந்து தேவையெனில் எதையும் குறிப்பிடாமலும்
Search Delete File கிளிக் செய்யவும். உங்களுக்கு படம் 2 ல் உள்ளவாறு இந்ததளம் திறக்கும்
 

படம் 2
  
இதில் நீங்கள் மீண்டும் தேடிய பைல் கிடைக்கும். பின் அதை கிளிக் செய்து Restore to Copying கிளிக் செய்தால் நீங்கள் சேமிக்க வேண்டிய Drive வைத்
தெரிவு செய்து ஓகே கொடுக்கவும்.
 
நீங்கள் சேமித்த இடத்தில் நீங்கள் தொலைத்த அழித்த பைலகள் உடனே அங்கே வந்து அமர்ந்திருக்கும்.  பயன் படுத்தி பாருங்கள்.

அல்லது இன்னொரு மென்பொருள் உள்ளது மேலே குறிப்பிட்டது போலதான் செய்யவேண்டும்.

முகவரிதரும் தளம் இங்க நேரடி தரவிறக்கம் செய்க http://www.snapfiles.com/php/pdownload.php?id=104372&pi=421200&a=7112828

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள http://www.snapfiles.com/features/811-421200-filescavenger.html