பயனுள்ள சில இணையத்தளங்கள், Windows சம்மந்தமான சில தகவல்கள்
பயனுள்ள சில இணையத்தளங்கள்
1.http://www.myeverydaypage.com/
பல இணையத்தளங்கள் நாம் அன்றாடம் செல்லும் இணையத்தளங்களாக
இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் அவ்விணையத்தளத்துக்கு செல்வதற்கு இணையமுகவரியை
டைப் செய்யவேண்டியுள்ளது (Favoriten ல் சேர்த்து வைத்து இயக்கலாம் என்று
நீங்கள் கேட்கலாம்)
அடிக்கடி பயன்படுத்தும் இணையத்தளத்துக்கான File களின் ஐகான் ஓரே இணையத்தளத்தில்
அமைத்து இணைப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.நீங்கள் பயன்படுத்திபார்த்திராத
இணையத்தளங்தின் லிங்குகளும் இருக்குமென நினைக்கின்றேன். ஒருதடவை மேலே தரப்பட்ட
இணையத்தளசுட்டியை கிளிக்செய்து சென்று பாருங்களேன் (www.myeverydaypage.com)

2.http://www.freegabmail.com/Composer/Composer.htm
உங்களுடைய இனிமையான குரல்வளத்தை உங்கள் நண்பர்களுக்கு சிறிய
பாட்டாகவோ அல்லது பேச்சாகவே Audio வடிவில் அனுப்பவேண்டுமெனில் மேலேதரப்பட்ட
இணையத்தளசுட்டியை கிளிக்செய்யும்போது படம் 1 ல் உள்ளவாறு திறக்கும் அங்கு
உங்கள் குரல்வளத்தை Record செய்து அனுப்பி பயனபபெறுக
(Audio வாக பதிவுசெய்ய நிறைய புறோக்கிறாம்கள்
இருக்கின்றன இருந்தாலும் இலகுவானமுறையில் விரைவாக இதன்மூலம் அனுப்பலாம்)
படம் 1

3.http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html
நீங்கள் internet Explorer பயன்படுத்தி
இணையப்பங்கங்களைப்பார்வையிடுபவர்கள் என்றால்
இந்த இணையத் தளத்தில்
இருக்கும் ஓர் மென்பொருளை கொண்டு உங்கள் உலாவியினுள்
சேமிக்கப்பட்டிருக்கும் அத்தனை கடவுச் சொற்களையும் கண்டு பிடித்து
விடலாமாம்.நீங்கள் சிலவேளைகளில் Benützername ,Passwort போன்றவற்றை மறந்தால்
இவ்விணையத்தளத்துக்கு சென்று கண்டுபிடித்துவிடலாம்.படம் 2 ல் 5
புறோக்கிறாம்கள் உள்ளது உங்களுக்குதேவையானவற்றை தரவிறக்கம்செய்து
பயன்பெறுக.போதியளவு விளக்கங்கள் அவ்விணையத்தில் கொடுத்துள்ளார்கள்.
படம் 2
(நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் தனிப்பட்ட
கணினியாக இருந்தால் பெரிதாக பயப்பட தேவையில்லை. பலரும் பயன்படுத்தும் கணினி
என்றால் கவனம் தேவை)

4.http://sketchup.google.com/
உலகறிந்த கூகுள் நிறுவனம் இலவச மென்பொருளை வழங்குவது யாவரும்
அறிந்ததே. அவ்வாறு
இன்னுமொரு மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது இது முப்பரிமான (3D) படங்களை
வரையும் மென்பொருள். அந்த மென்பொருளைப்பெற
மேலேயுள்ள லிங்கைகிளிசெய்யவும்
அங்குசென்று தரவிறக்கம்செய்து பயன்பெறுக

Windows சம்மந்தமான சில தகவல்கள்
Windows ல் எவ்வாறு Ordner க்கு பெயர்
கொடுக்காமல் விடுதல்
எந்த Ordner (அறை) க்கு பெயர் இல்லாமல்
செய்யவேண்டுமோ அந்த அறையை படம் 1 ல் உள்ளவாறு தெரிவுசெய்க
படம் 1
பின்னர் Keyboard ல் F2 அழுத்திய பின் Alt ஐ அழுத்தியவாறு
Keyboard ல் வலதுபக்கத்தில் உள்ள (Number Key) எண்வரிசையில் 255 என்ற எண்ணை
அல்லது 0160 என்ற எண்ணை அழுத்தியபின் Keyboard ல் இருந்து கைகை எடுத்துவிட்டு
பார்க்கும்போது படம் 2 ல் உள்ளவாறு Ordner ல் பெயர் இன்றிக்காணப்படும்
படம் 2
Windows ல் CD அல்லது DVD (Audio,Video,Program
CD,DVD) Auto Run ஆவதை எவ்வாறு தடுத்தல்
நீங்கள் Audio ,Video, Program CD
அல்லது DVD களை அதற்குரிய Drive வினுள் செயுத்தியபின் தானாகவே Auto Run
ஆவதைகவனித்திருப்பீர்கள் இவற்றை தற்காலிகமாக தடுக்க வேண்டுமெனில் நீங்கள் CD
அல்லது DVD ஐ Drive வினுள் செலுத்தியவுடன் Keyborad ல் உள்ள Shift கீயை
சற்றுநேரம் அழுத்திபிடியுங்கள் Auto Run ஆவது தடைப்படும்
(நிரந்தரமாக தடுக்கவும் வழியுள்ளது அடுத்த அத்தியாயத்தில்
விரிவாகப்பார்ப்போம்)
|