13/06/2007

Computer Tips


Windows ல் எவ்வறு Start  பட்டனின் பெயரை உங்கள் விருப்பத்துக்கேற்றவாறு மாற்றுதல்

எச்சரிக்கை: நாம் செய்யப்போகும் மாற்றங்கள் Registry-யில் என்பதால் மிகுந்த கவனம் தேவை. சிறு பிழை கூட கணினியை செயலிழக்க வைக்கக்கூடும் என்பதை எப்போதும் மறவாதீர்கள். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

Start Button பெயரைமாற்றுவதால் நன்மையேதும் ஏற்படப்போவதில்லை ஏனையோர்கள் Start Button பெயரை மாற்றுவதை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் மாற்றிப்பார்க்க வேண்டும்போல் ஆர்வமாகவிருக்கும் ஆகவே உங்களுக்காக எவ்வாறு  Start Button பெயரை மாற்ருவதென்று விரிவாக பார்ப்போம்
 
  •  Start Button பெயரைமாற்ற நீங்கள் C:/Windows/Explorer.exe என்ற கோப்பை எடிட்செய்யவேண்டும்
     
  • C:/Windows/Explorer.exe  ஐ எடிட் செய்வதற்கு Resource Hacker என்னும் புறோக்கிறாமை தரவிறக்கம்செய்யவேண்டும்

    (Resource Hack என்ற exe கோப்பை மாற்றம் செய்யக்கூடிய Compose and Decomposer ன் மூலம் C:/Windows/Explorer.exe என்ற கோப்பை எடிட் செய்து Compose செய்ய வேண்டும்...)

    1.முதலில் Resource Hack என்னும் புறோக்கிறாமை இந்தசுட்டியை http://delphi.icm.edu.pl/ftp/tools/ResHack.zip அழுத்தி தரவிறக்கம் செய்க.

    (Resource Hack என்ற exe  கோப்பை ஐ தரவிறக்கம்செய்யும்போது Zip format ல் இருக்கும் நீங்கள் Unzip செய்யவேண்டும்.உங்கள்கணினியில் Resource Hack நிறுவத்தேவையில்லை.Unzip  செய்வதற்கு உங்களிடம் Winzip Program இல்லையெனில்
    Winzip Download Now கிளிக்செய்து தரவிறக்கம் செய்து உங்கள்கணினியில் நிறுவுக.)

    2.தரவிறக்கம் செய்து Unzip செய்தவுடன் படம் 1 ல் உள்ளவாறு தோன்றும் அதில் ResHacker என்பதனை கிளிக்செய்து திறக்கும்போது படம் 2 கிடைக்கும்

    படம்1

    3.Explorer திறப்பதற்கு படம் 2 ல் File/Open கிளிக்செய்க படம் 3 கிடைக்கும்

    படம் 2

    4. படம் 3 ல் Windows ல் உள்ள Explorer ஐ தெரிவுசெய்து Öffnen செய்க படம் 4 கிடைக்கும்.

    படம் 3

    5.படம் 4 ல்
     "String Table"  ஐ கிளிக்செய்து 37 என்ற Ordner ஐ கிளிக்செய்யும்போது 1031 தோன்றும் அந்த எண்ணைக்கிளிக்செய்யும்போது படம் 4 ல் உள்ளதுபோல வலது பக்கத்தில் விபரம் கிடைக்கும்

    படம் 4

    6.மேலேயுள்ள படம் 4 ல் 578 ல் Start என்று இருக்கும் நான் Start க்கு பதிலாக NITHUS என்று கொடுத்துள்ளேன் படம் 5 ல் காண்க.நீங்கள் உங்களுக்கு விருப்பமான பெயரைக்கொடுக்கலாம்.

    படம் 5


    7. படம் 5 ல் Start க்கு விருப்பமானபெயர்கொடுத்தபின்னர் Compile Script என்பதனைக்கிளிக்செய்க

    8.பின்னர் File மெனுவில் Save as என்பதனைக்கிளிக்செய்க படம் 6 கிடைக்கும் அதில் Windows னுள் நீங்கள் விரும்பியபெயர் கொடுத்து பதியவேண்டும்.(Dateiname நான் Explorernithu.exe என்று கொடுத்துள்ளேன்) படம் 6 ல் Speichern செய்க
    (குறிப்பு: Explorer.exe நாங்கள் ஏற்கனவே திறந்து மாற்றம் செய்தோம்.அதேபெயரில் பதிந்தால் தவறுஏதாவது நடந்தால் Explorer.exe  Open ஆகாது)

    படம் 6
     
  • அடுத்து Registry Editor  சென்று அதில் நில மாற்றங்கள் செய்யவேண்டும் அதற்கு

    9.. Start/Ausführen  கிளிக்செய்க படம் 7 கிடைக்கும் அதில் Öffnen என்றபகுதியில் regedit  என்று கொடுத்து Ok கிளிக்செய்யும்போது படம் 8 ல் Windows Regitry திறக்கும்

    படம் 7

    10.படம் 8 ல் நீங்கள் கீழே தரப்பட்டவாறு கிளிக்செய்க

    HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon

    Shell என்பதனை இரண்டுதடவை கிளிக்செய்யும்போது படம் 9 கிடைக்கும்

    படம் 8

    11.படம் 9 ல்  Explorer.exe என்பதற்க்கு பதிலாக நீங்கள் ஏற்கனவே  Save As செய்த Fileன் பெயரை டைப் செய்து Ok கிளிக்செய்து எல்லாவின்டோக்களை மூடி கணினியை Ausschalten செய்யுங்கள்.
    (உ+ம் நாங்கள் ஏற்கனவே
    Explorernithu.exe என்று கொடுத்தோம் அதையே படம் 9 ல் கொடுத்துள்ளேன்)

    படம் 9

    12.பின்னர் புதிதாக கணனியை தொடக்குங்கள் படம் 10 உள்ளவாறு Start Button மாறியிருப்பதைக்காணலாம் (நான்செய்தமாற்றங்களின்படி மாறியுள்ளது இனி நீங்கள் உங்களுக்கு விரும்பியபெயர்கொடுத்து மாற்றுங்கள்)

    படம் 10

    Start Button ஐ மாற்ற இவ்வளவு வேலைகள்செய்யவேண்டியுள்ளது

    (
    இன்னோர் விடயத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். இப்பாடியான பெயர் மாற்றும் வழிமுறைகளை மிக அவதானமுடன் செய்வதே சாலச்சிறந்தது. கணினிக்கு புதியவர்கள் மிக மிக அவதானம்.)