07/3/2007

Word Tips


வேர்டின் கல்குலேட்டரைப்பயன்படுத்தி எவ்வாறு கணக்கிடலாம் என்று பார்ப்போம்

Ms Word ல் உள்ளேயே சிறிய கல்குலேட்டர் உள்ளன அதைப்பயன்படுத்தி நீங்கள் கணக்கிடலாம்

முதலில் கல்குலேட்டரை எவ்வாறுகொண்டுவருவதென்றுபார்ப்போம்

நீங்கள் செய்யவேண்டியவை

Word புறோக்கிராமைத் திறக்கவும்

மெனுபாரில் Extras --- Anpassen ஐ கிளிக்செய்க படம் 1 கிடைக்கும்

படம் 1

படம் 1 ல் உள்ளதுபோல Befehle என்பதைத்தெரிவுசெய்து Kategorien என்பதன்கீழ் காணப்படும் Extras என்பதைத்தெரிவுசெய்க
Befehle என்றபட்டியலில்
Extras Berechnen காணலாம்.

படம் 1 ல் 
 Extras Berechnen ஐ இழுத்துவந்து மெனுபாரில் உள்ள Extras ல் போடுங்கள். Extras மேல் கர்சர் கொண்டுவந்தவுடன்
அது விரிவடையும் (படம் 2 ல் உள்ளதுபோல) எந்த இடத்தில்
Extras Berechnen  ஐ விடவேண்டுமோ அங்கு கொண்டுவந்து விடலாம்

படம் 2

Schließen  ஐ அழுத்தவும்

இப்போது Extras ன் கீழ்  Extras Berechnen என்ற புதியமெனு வந்திருப்பதைக்காணலாம்

Extras Berechnen ஐ பயன்படுத்தி கணக்கொன்றை செய்துபார்ப்போம்

வோர்ட் டொக்கிமென்டில் ஓர் இடத்தில் 15/4 என்ற கணக்கின் விடைவரவேண்டுமெனில்

15/4 என டைப்செய்யுங்கள் அவற்றைத்தெரிவுசெய்யுங்கள் பின்னர் Extras ---- Extras Berechnen கிளிக்செய்யும்போது Statusleiste ல்
கணக்குக்கான விடைதெரிவதைக்காணலாம்  ()

சிறிது நேரத்தின்பின் மறைந்துவிடும். Zwischenablage ல் தானாகவே கொப்பி செய்து விடுகின்றது. நீங்கள் விடை வணவேண்டிய
இடத்தில் கர்சரைக்கொண்டுவந்து
Bearbeiten/Einfügen (அல்லது Ctrl+V) கிளிக்செய்து விடையைக்கொண்டுவரலாம்