கணிப்பொறி
பாதிப்பில் இருந்து விடுபட யோசனைகள்
- அதிக விசை கொடுத்து மவுசை பிடிக்காதீர்கள்..
- நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்..
- தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை
இலகுவாகவும், நேராகவும் வைத்திருக்கவும்.
- மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும்
வைக்கவும்.
- உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு
திரையை அமைக்கவும்.
- கழுத்தை கொஞ்சம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை
முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது.
- உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்டி மீட்டர்
இடைவெளி இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்திற்கொரு முறை
திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம்
பார்க்கவும். அல்லது பச்சை மரங்களைப் பார்க்கவும்.
- முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு
அமரவும்.
- கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும்.
- கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை
மாற்றவும்.
- இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம்.
வேலையிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம்.
- திரை : ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும்
கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது
- கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாக
வைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில்
தூசிகள் படியாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும்.
- மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு
சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது
சிறந்தது.
- இருக்கை, மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக
முறையற்ற மேசை நாற்காலிகளை வாங்காமல் முதுகுக்கு ஏற்ற வகையில்
தயாரிக்கப்பட்டவைகளை மட்டுமே பார்த்து வாங்கவும்.
|