05/07/2008

Computer Tips


கணினிக்கு புதியவர்களுக்காக Winzip சம்மந்தமான விரிவான விளக்கங்கள்
 

உங்கள் கணினியில் உள்ள பெரிய கொள்ளளவுடைய Datei அல்லது Ordner ஐ சுருக்கி கணினியில் எவ்வாறு பதிதல்

ஏன் அவ்வாறு சுருக்கவேண்டும்

  • Floppy Disk போன்ற குறைந்தகொள்ளளவுடைய சேமிப்பு சாதனத்தில் கூடியது  1.44 Mb  தகவல்களையே பதியலாம்.Winzip ஐ பயன்படுத்தி 15 Mb தொடக்கம் 20Mb வரையிலான தகவல்களையோ அல்லது படங்களை அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு 2Mb வரை சுருக்கலாம்.(Floppy Disk பாவனை தற்பொழுது குறைந்துவிட்டது)
     
  • இவ்வாறு பெரியகொள்ளளவுடைய File களை குறைந்தகொள்ளளவுக்கு சுருக்குவதால் அனேகமான இணையத்தளங்கள் Winzip ஐ பயன்படுத்தி File களை சுருக்கி இணையேற்றம் செய்கின்றன அதனால் அவர்களுக்கு குறைந்தளவு இடம் போதுமானதாகவுள்ளது.
     
  • அவர்கள் Winzip ஐ பயன்படுத்தி File களை சுருக்கி இணையேற்றம் செய்வதனால் நீங்கள் உங்களுக்கு வேண்டிய படங்களையோ அல்லது மென்பொருட்களை தரவிறக்கம்செய்யும்போது Zip Format ல் இருக்கும். அதை நீங்கள் Unzip செய்து தான் பயன்படுத்தலாம்
     
  • அதற்கு உங்களிடம் Winzip Program உங்கள் கணினியில் நிறுவியிருத்தல்வேண்டும்

           இந்த Winzip புறோக்கிறாமின் பழையபதிப்பினை இலவசமாக தரவிறக்கம்செய்ய கீழ் உள்ள இணையத்தள சுட்டியை கிளிக்செய்க

          Winzip81  Download Now 

        இனி Winzip ஐ தரவிறக்கம்செய்தபின் உங்கள் கணினியில் நிறுவுக

சிப் File ஐ எவ்வாறு உருவாக்குதல் என்றுபார்ப்போம

Winzip ஐ நிறுவியபின்னர்   Desktop ல் இவ்வாறு  சிம்போல் தோன்றும் அவற்றை இரண்டுதடவை கிளிக்செய்யும்போது படம் 1 கிடைக்கும் அதில் நீங்கள் I Agree என்பதனைக்கிளிக்செய்யும்போது படம 2 கிடைக்கும்

படம 1
சிப் File ஐ உருவாக்குவோம். அதற்கு படம் 2 ல்  File / New Archive  ஐ கிளிக்செய்க (அல்லது சிம்போலைக்கிளிக்செய்க) படம் 3 கிடைக்கும்

படம 2

படம் 3 ல் நீங்கள் உருவாக்கப்போகும் சிப் File க்கான பெயரைக்கொடுங்கள் (உதாரணமாக Brief என்ற அறையினுள் Dateiname  Sample என்று கொடுத்துள்ளேன்)

படம 3

இனி படம் 3 ல் Ok கிளிக்செய்க படம் 4 கிடைக்கும் அதில் எந்த File ஐ சுருக்கவிரும்புகின்றீர்களோ அதைதெரிவுசெய்து (உதாரணமாக நான் Sonntag தெரிவுசெய்துள்ளேன் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட File ஐ தெரிவுசெய்யலாம்)  Add ஐ கிளிக்செய்யும்போது நாங்கள் குறிப்பிட்ட Brief என்ற அறையில் Sample என்ற பெயரில் சுருக்கப்படும்

(நீங்கள் விரும்பினால் Password  கொடுத்தும் சுருக்கலாம் அதற்கு படம் 4 ல் Password  கிளிக்செய்து கடவுச்சொல்கொடுக்கவும் பின்னர் Unzip செய்யும்போது கடவுச்சொல் ஒரேமாதிரிகொடுக்க வேண்டும்)

படம் 4

படம் 5 ல் நீங்கள் எந்த File களைச் சுருக்கினீர்களோ அந்த File கள் விபரங்களோடு தோன்றும்

படம் 5

படம் 6 ல் Open கிளிக்செய்து நீங்கள் சுருக்கிய File கள் காணலாம்

படம் 6

சிப் File ஐ எவ்வாறு Unzip செய்வது (விரிவடையச்செய்தல்)                                                                                                                                                                                                   மேல

ஒரு File ஐ Zip செய்ய Winzip Program பயன்படுத்துவதுபோல Unzip செய்வதவதற்கும் அதே புறோக்கிறாமை பயன்படுத்துவோம்.மேலே குறிப்பிட்டவாறு Winzip ஐ படம் 1  2 ல் உள்ளவாறு புதிதாக  திறவுங்கள் நாங்கள் ஏற்கனவே சுருக்கிவைத்துள்ள  (Sample ) ஐ Unzip செய்வோம்

அதற்கு படம் 2 ல் File / Open Archive  கிளிக்செய்க (அல்லது சிம்போல்)

படம் 6 ல் உள்ளவாறு திறக்கும் அதில் Sample தெரிவுசெய்து Öffnen கிளிக்செய்யும்போது சுருக்கப்பட்ட File ன் பட்டியல் படம் 7 ல் உள்ளவாறு தோன்றும்

படம் 7

படம் 7 ல் உதாரணமாக Sonntag என்ற Dokument ஐ தெரிவுசெய்து ஐ கிளிக்செய்யும்போது படம் 8 கிடைக்கும்

படம் 8

படம் 8 ல் எந்த அறையில் Unzip செய்யவிரும்புகிறீர்களோ அந்த அறையைத்தெரிவுசெய்து (அல்லது புதிதாக அறைதிறந்து)அதனுள் Extract கிளிக்செய்து அதனுள் Unzip செய்க.

(நீங்கள் Internet ல் இருந்து Download செய்யும்போது zip Format ல் வரும் File களை இந்தமுறையைப்பயன்படுத்தி Unzip செய்யலாம்)

எவ்வாறு வேறுவழிகளில் செய்தல்

நீங்கள் Winzip Program ஐ உங்கள் கணினியில் நிறுவியபின்னர் Datei அல்லது Ordner ல் வலது கிளிக்செய்யும்போது Winzip புறோக்கிறாம் ஒட்டிக்கொள்ளும்

சிப் File ஐ எவ்வாறு உருவாக்குதல் என்றுபார்ப்போம்

உ+ம்

படம் 9 ல் சுருக்கவேண்டிய File ஐ வலது கிளிக்செய்து வரும் சிறியமெனுவில் Winzip ஐ தெரிவுசெய்யும்போது Add to Zip file கிளிக்செய்யும்போது படம் 10 கிடைக்கும்

படம் 9

படம் 10 ல் I Agree கிளிக்செய்க படம் 11 கிடைக்கும்

படம் 10

படம் 11 ல் எந்த அறையினுள் சுருக்கவேண்டுமோ தெரிவுசெய்து Add  ஐ கிளிக்செய்யும்போது அங்கே சுருக்கப்படும்

படம் 11

சிப் File ஐ எவ்வாறு Unzip செய்வது (விரிவடையச்செய்தல்)                                                                                                                                                                                               மேல

ஏற்கனவே சுருக்கியுள்ள File ஐ வலதுகிளிக்செய்து Winzip ஐ தெரிவுசெய்து Extract to .. என்பதனைக்கிளிக்செய்யும்போது படம் 13 கிடைக்கும் அதில் எங்கே Unzip செய்யவிரும்புகின்றீர்களோ அந்தஅறையைத்தெரிவுசெய்து Extract கிளிக்செய்யும்போது Unzip ஆகும்

(படம் 12 Extract to here தெரிவுசெய்தால் அந்த அறையினுள்ளேயே Unzip ஆகும்)

படம் 12

(Exe  Extention கொண்ட File அக சுருக்கவரும்பினால் Create Self-Extractor.exe ஐ தெரிவுசெய்து சுருக்கலாம் உங்களுக்கென தனியான வெப்சைட் இருந்தால் இவ்வாறு சுருக்கி Upload செய்வதனால் மற்றவர்கள் Download செய்யமுடியும்)

படம் 13

(முடிந்தளவுக்கு விளக்கம் தந்துள்ளேன் எழுத்துபிழை பொறுக்க)                                                                                                                                                                                                                மேல