27/03/2009

Free Software


பயனுள்ள இலவச மென்பொருட்கள்
 

___________________________________________________________________

மென்பொருள் சொல்லாடல

  1. இலவச மென்பொருள் (Free Software)
  2. தனியுரிமை மென்பொருள் (Proprietary Software)
  3. மூடிய மூல மென்பொருள் (Closed Source Software)
  4. மூடிய ஆணைமூல மென்பொருள் (Closed Source Code)
  5. திறந்த மூல மென்பொருள் (Open Source Software)
  6. திறந்த ஆணைமூல மென்பொருள் (Open Source code)
  7. கட்டற்ற மென்பொருள் (Software without any control- Totally free)
  8. கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள் (FOSS - Free and Open Source Software)

 

கனணிமூலம் டைப்பிரேட்டிங் கற்றுக்கொள்ள   
 

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரைவாக டைப்செய்து பழக இலகுவான மென்பொருட்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன
அவற்றில் சில இணையத்தளசுடடிகள் கீழேயுள்ளன அவற்றில் உங்களுக்கு பிடித்தத இலகுவான மென்பொருளைத்தரவிறக்கம் செய்து
பயன்பெறுக

முகவரி சுட்டிகள்:-

http://www.typefastertypingtutor.com/

http://senselang.com/

http://www.freedownloadscenter.com

http://typing.qcalculus.com/

http://www.askmesoft.com/maxtype_lite.htm

இதெல்லாம் எனக்கு வேண்டாம். நான் வார்த்தையின் முதல் எழுத்தை டைப் அடித்தால் எனக்கு அது சம்பந்தமான
அனைத்து எழுத்துக்களும் வரவேண்டும் என விரும்புகிறிர்களா? அதற்கும் ஒரு மென்பொருள் உள்ளது 

அதற்கான முகவரி சுட்டி:-

http://www.typebooster.com/

தரவிறக்கம்செய்து பயன்பெறுக.

 

இலவச மென்பொருள் மீடியா பிளேயர்.

சில வீடியோ படங்கள் உங்கள் கணனியில் திறக்க மறுக்கும். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு 
வெறுப்பே ஏற்படும் . ஆனால் இந்த இலவச மீடியா மென்பொருள் வீடியோ லென் மீடியா பிளேயர் ஆனது (VideoLan Client-VLC)
நமக்கு உதவும். இந்த VLC Media Player கொண்டு ஏராளமான ஆடியோ மற்றும் வீடியோ Format பைல்களைப் பார்க்க முடியும்.

இந்த மென்பொருளானது
 

AVI , OGG , MP2 , MP3 , MP4 , DIVX , VCD , DVD 
 
என அனைத்து வகையிலும் செயல்படும் இந்த மென்பொருளானது Streaming Media செர்வராகவும் பயன்படும்.

இது குறைந்த அளவே இடம் பிடிப்பதால் இது நிறுவதில் சிரமமிராது.

 
தள முகவரி:- http://www.videolan.org/

நேரடி தரவிறக்கம்:  Download Now for Windows (16 MB)

VLC on Windows

 

கணிணி என்கிற கடலில் நாம் தேடவேண்டிய  முத்துக்கள் எவ்வளவோ உள்ளன.இந்த தளத்தில் நமது தேவைக்கு வேண்டிய அளவுக்கு
தகவல்கள் கொட்டிகிடக்கின்றன. அங்கிருந்து கணணிசம்மங்தமான தகவல்களை பெற்று பயன்பெறுங்கள்

  

அதற்கான இணையத்தளசுட்டி : http://computerhope.com/jargon.htm 
 
நமது கணிணியில் உள்ள Software - Hardware பற்றி அறிந்து கொள்ள

நாம் நமது கணிணியில் பல software களையும் சில Hardware களையும் நிறுவியிருப்போம். ஆனால்
அதன் விவரம் நமக்கு தெரியாது. அதுபோல் Hardware -ன் விவரங்கள் யாராவது கேட்டால் திருதிரு வேன முழிப்போம்.
அதற்கென இலவச மென்பொருள் உள்ளது அதனை தரவிறக்கம் செய்து உங்கள் கனணியில் நிறுவியபின்னர்
 Hardware மற்றும் Software விவரங்களை சரி பார்க்கலாம்
 

நீங்களும் இந்த அமன்பொருளைமுயற்சி செய்து பாருங்கள். 1.60 எம்.பி.அளவே உள்ளதால் அதிக இடத்தை இது
கணணியில் பிடித்துக்கொள்ளாது.


 
முகவரி தளம்:-
http://www.astra32.com/download.htm
 
Drivers  தேடி பதிவிறக்க செய்ய  

நாம் பலதரப்பட்ட கணணி சாதனங்களை இயக்கி வருகின்றோம். நாங்கள் புதிதாக கணனியை வாங்கும்போது அதற்குரிய
Driver ஐ CD அல்லது DvD போன்றவற்றில் தருவார்கள் அல்லது நீங்கள் புதிதாக ஏதாவது Hardware ஐ வாங்கினால் அதற்குரிய
Driver CD அல்லது DvD ல் தருவார்கள். நாங்கள் சிலவேளைகளில் அதற்குரிய Driver  CD அல்லது DvD தொலைத்துவிட்டால்
கவலையைவிடுங்கள் அதற்கென இணையத்தளம் உள்ளது அங்கிருந்து பதவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

http://members.driverguide.com/index.php
 

கம்யூட்டர் அகராதி.



 

 
நாம் வீட்டில் ஆங்கில அகராதி (English Dictionary) வைத்திருப்போம் . ஒரு சிலர் Oxford English Dictionary
வைத்திருப்பார்கள்.ஆனால் கணணியில் வேலை செய்யும் சமயம் நமக்கு திடீர் என ஒரு சொல்லுக்கு 
அர்த்தம் தெரியவில்லையென்றால் அகராதி தேடி அலையவேண்டாம் இந்தமென்பொருள் நாம் Download
செய்து  அது நமது கணிணியில நிறுவியபின்னர் டெக்ஸ்ட்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.
தேவைபடும் போது மவுஸால் கிளிக்செய்தால் wordweb தோன்றும். அதில் Lookup Box வரும்
 
அதில் நமக்கு தேவையான வார்த்தையை டைப்செய்தால் அதற்கான அர்த்தம் வரும்.  
 
1. Nouns
2.Verbs
3.Adjectives
4.Adverbs 
 
மேற்கண்ட வார்த்தை எதுவோ அது தெரிவாகும். மேலும் இதில்
 
1.Nearest 
2.Synonyms
3.Parts
4.Type of
5.Types
 
என ஐந்து வகையான வரிகள் திறக்ககும் . நாம் தேடிய வார்த்தைக்கு 
அர்த்தம் பார்த்ததுடன் அதை ஒட்டிய வார்த்தையையும் காணலாம். அதுபோல்
எதுவேண்டுமோ அதை நாம் தேர்ந்தெடுக்கலாம். மேலும் Copy செய்யும் வசதியும் உள்ளது. 

அந்த தள முகவரி:- 
 
http://www.download.com/WordWeb/3000-2279_4-10003201.html?part=dl-WordWeb&subj=dl&tag=button&cdlPid=10897446
 
http://www.download.com/WordWeb/3000-2279_4-10003201.html
 
இத்தளம் சென்று தேவையான மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்
 
50 இலவச மென்பொருள்கள் உங்களுக்காக

 

 

 

 

 

 

ஒரே பொட்டலமாக (zipped file) 90 MB அளவுக்குள், 50 விதமான இலவச மென்பொருட்கள் உங்களுக்காக.

இதற்கு Computer Repair Utility Kit எனப் பெயரிட்டுள்ளனர். Ipod, Flash Drive, USB கருவிகளில் இந்த Pack ஐ எடுத்துச்
சென்று கணினிகளில் வன்பொருளில் (hardware) ஏற்படும் தவறுகளைச் சரிசெய்யலாம்.

மேலும் பொதுப்பயனர்களின் கையடக்கக் கருவிகளிலும் (hand held devices) அவசியம் இருக்கவேண்டிய தொகுப்பு இது.

கோப்பு மேலாண்மை (File Management)
தகவல் அறிதல் (Information)
கெட்டதைச் சரிசெய்ய (Repair Tools)
இழந்த தகவலை மீட்க (Recovery Tools)
வைரசு நீக்குவதற்கான கருவிகள் (Virus and malware Removal)
வலைப்பின்னல் கருவிகள் (Network Tools)
இதர வகை (Miscellaneous)
புத்தாக்கம் (Tweaks)
Scripts எனப் பலதரப்பட்ட தலைப்புகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு


தரவிறக்கம் (Download) செய்யக் கீழேயுள்ள முகவரியில் கிளிக்செய்யவும்

http://www.technibble.com/computer-repair-utility-kit/
 

MKV, Divx, Avi, MP4, DVD கோப்புகளை Media Player-ல் எவ்வாறு பார்ப்பது  

மேலே குறிப்பிட்ட பல்வேறுவகையான Format வடிவில் உள்ள வீடியோ கோப்புக்களை மெடியாபிளேயரில்
பார்பதற்கு இலவசமென்பொருள் உள்ளது அதனை தரவிறக்கம்செய்து பயன்படுத்துங்கள்.

அந்த தள முகவரி:- 

http://getitfreely.co.cc/content/windows®-essencials-codec-pack
 

கோப்புகளை விரிக்க ஒரு நேரடி வசதி  











சுருக்கப்பட்ட கோப்புகளான .zip கோப்புகளை நண்பர்களிடம் இருந்தோ, இணையத்தில் இருந்தோ,
 மின்னஞ்சல் வாயிலாகவோ தினமும் பெறுகிறோம். windows பயனர்கள் அத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள
கோப்புச்சுருக்கி விரிக்கும் வசதியைப் பயன்படுத்துகிறோம். அதனால் .zip கோப்புகளை உருவாக்கவோ / விரிக்கவோ இயலும்.
ஆனால் Windows Explorer வாயிலாக 7Z, RAR, Z , TAR போன்ற பிற வகையிலான கோப்புகளை விரிக்க இயலாது.

நண்பரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற RAR கோப்புகளை விரிவாக்கிப் பார்க்கவும், மேலும் இப்படிப்பட்ட கோப்புகளை
இயக்கவும் நாம் தனியாக மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு மாற்றாக ஒரு இணையத்தளம் : http://www.wobzip.org/

இந்தத் தளத்தில் சுருக்கப்பட்ட கோப்பினை ஏற்றினால் போதும். உங்கள் அழுத்திச் சுருக்கப்பட்ட கோப்புகளை விரிக்கச்
செய்து நீங்கள் பயன்படுத்த வழிவகை செய்துவிடும்.விரிக்கப்பட்ட கோப்புகள் ஒவ்வொன்றும் உங்கள் உலவியில் LINK ஆகத்
தெரியும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மேலும் ஏதோ ஒரு இணையத்தளத்தில் நீங்கள் கண்ட RAR கோப்பின் முகவரியான URL ஐ இங்கே உள்ளிட்டாலும் போதும்.
உலவியில் இருந்தபடியே இயக்கலாம் என்பது ஒரு கூடுதல் வசதி.

குறிப்பு :
1) இந்தத் தளமானது இன்னும் சோதனை வடிவிலேயே உள்ளது.
2) ஒரு கோப்பின் அதிகபட்சக் கொள்ளளவு 100 MB மாத்திரமே

தமிழ்நெஞ்சம்

 

பழுதடைந்த CD / DVD களை இயக்க, DVD படத்தை வெட்டியெடுக்க   
 

மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம்.
 அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம்.

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப்
பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.

கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.



 

 

 

 


இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன்மூலம்
பழுதடைந்த CD / DVD களிலில் ஏற்றப்பட்ட தகவல்களை மீட்பதற்கும் வழியுண்டு.

அந்த தள முகவரி:- 
http://www.aivsoft.com/downloads/badcdreader/BadCDDVDreaderSetup.exe

DVD Cutter என்பது ஒரு எளிய சிறிய மென்பொருள். ஒரு DVD யில் ஏற்றப்பட்டுள்ள படக் கோப்பின் ஒரு
குறிப்பிட்ட பகுதியை மட்டும் நமது கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

DVD Cutter மூலம் ஒரு .VOB கோப்பின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தனியாகப் பதிவு செய்திட இயலும்.


 

 

 

 

 


ஒரு முழுநீளத் திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சியையோ, அழகான காதல் காட்சியையோ,
 நகைச்சுவையையோ கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருள் உதவும்.

அந்த தள முகவரி:- 
http://www.aivsoft.com/downloads/dvdcutter/dvdcutterSetup.exe

தமிழ்நெஞ்சம்
 

பிடிஎஃப் (PDF) கோப்புகளை உருவாக்க 4 இலவச மென்பொருட்கள் 
 

(PDF - Portable Document Format)

நம்மிடம் இருக்கும் எழுத்து வடிவிலான(text), பட வடிவிலான(picture) கோப்புகளை பிடிஎஃப் கோப்பு வகைக்கு
மாற்றுவதற்கு உதவும் இலவச மென்பொருட்கள் நான்கினை இங்கே காண்போம்.

இந்த சேவையை வழங்கும் மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை
 வணிகரீதியிலானவையாகவும் இலவசம் அல்லாதவையாகவும் இருக்கும். இலவசமாக இருந்தால் அவற்றில்
ஏதேனும் வரையறை இருக்கும்.

மிகுந்த திறன் உடைய மென்பொருளாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.

1. PDFForge

 


இது ஒரு திறந்த நிலை மூலவரைவு வகையைச் சேர்ந்த மென்பொருள் பயன்பாடு.
விசுவல் பேசிக் மூலம் எழுதப்பட்ட நிரலைக் கொண்டது. இலவசமாகவே இருந்தாலும் பிற வணிகரீதியிலான
மென்பொருட்களின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இதன் மூலம் உருவாக்கப்படும் பிடிஎஃப் கோப்புகளுக்கு
 கடவுச்சொல் மூலம் கட்டுப்பாடு விதிப்பதோ, அச்செடுப்பதைத் தடைசெய்வதோ இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட
கோப்புகளை ஒன்றிணைப்பதும் எளிது.

2. PDF4Free


 

 

எந்த விதமான மின் கோப்புகளையும் பிடிஎஃப் ஆக மாற்ற உதவுகிறது.

3. doPDF



 

கணினியின் எந்த ஒரு பயன்பாட்டிலிருந்தும் பிரிண்ட் எனக் கொடுக்கும்போது Virtual PDF Printer என்பதைத் தேர்வுசெய்து பிடிஎஃப் ஐ உருவாக்கிடலாம்.

4. PrimoPDF


 

முன்னூறுக்கும் அதிகமான கோப்பு வடிவங்களிலிருந்து பிடிஎஃபை உருவாக்க இந்தப் பயன்பாடு உதவுகிறது.

தமிழ்நெஞ்சம்

ஆறு இலவச மென்பொருள்கள் ... 

கீழே தரப்பட்ட படங்களை கிளிக்செய்து அதற்குரிய இலவசமென்பொருட்களை தரவிறக்கம் செய்து
பயன்பெறுக
பத்து இலவச மென்பொருள்கள்  


படத்தின் மேல் கிளிக்செய்து சம்பந்தப்பட்ட தளத்துக்குச்சென்று இலவசமாகதரவிறக்கம் செய்து
பயன்பெறுவதோடு மேலதிக விபரங்களைப் பெறலாம்.
 
   

 











 

போட்டோக்களை எடிட் செய்ய இலவச மென்பொருள் 
 

போட்டோக்களை எடிட்செய்ய போட்டோ எடிட்டிங்: அடோப் போட்டோ ஷாப், கோரல் போட்டோ
பெயிண்ட் போன்ற மென்பொருள் மூலமாகத்தான் போட்டோக்களை எடிட் செய்திட வேண்டும்
என்பதில்லை இவற்றைவாங்கி பயன்படுத்தமுடியாதவர்கள் இலவசமென்பொருளைப்பயன்படுத்தலாம்

இலவசமென்பொருள் தரும் இணையத்தளசுட்டி கீழேயுள்ளது கிளிக்செய்து பயன்பெறுக

http://www.getpaint.net/

http://www.gimp.org/

http://www.alienskin.com/blowup/

 

கணினித் திரை நடவடிக்களைப் படமாகப் பிடிக்க  
 

 Screen Toaster - கணினித் திரை நடவடிக்களைப் படமாகப் பிடிக்க (screen capture). நல்ல உயர்தரத்தில் பதிவு செய்கிறது. தானியங்கியாக உங்கள் திரை நடவடிக்கைகளை இணையேற்றிவிடும் ஒரு சிறு Stop Button ஐ அழுத்தி முடித்தவுடன்.

இலவசமென்பொருள் தரும் இணையத்தளசுட்டி கீழேயுள்ளது கிளிக்செய்து பயன்பெறுக



http://www.screentoaster.com/
 

வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க 
 

Avidemux என்ற இந்த இலவச மென்பொருள் வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க, வடிவங்கள் மாற்ற பயன்படும்.
இது கீழே கண்ட அநேக வடிவங்களில் உள்ள வீடியோவுடன் ஒத்திசையும்.
DVD, VOB, AVI, DivX, XviD, WMV, MPG, MP4, AVI, MOV, MKV, DV, FLV.




http://avidemux.sourceforge.net/download.html

http://www.videohelp.com/download/av....4.4_win32.exe

 

Microsoft ன் இலவச மென்பொருட்கள். 
 

Microsoft விண்டோஸ் XP,விண்டோஸ் விஸ்டா மற்றும் ஆபீஸ் பயன்பாட்டிற்கு 150 மென்பொருட்களை இலவசமாக தருகிறது.
அனைத்தையும் ஒவ்வொன்றாக தேடி பிடிப்பது சிரமம் ஆதலால் இந்த பக்கத்தில் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

http://bhandler.spaces.live.com/blog/cns!70F64BC910C9F7F3!1231.entry?wa=wsignin1.0
 

இலவச வீடியோ மென்பொருள்
 
உங்கள் Digital கேமரா, வெப் கேமரா ஆகியவற்றில் எடுக்கப்பட்ட மூவி படங்களை இந்த சாப்ட்வேர் மூலம்
மாற்றலாம். நமது கம்யூட்டரில் கோடாக்(codec software) சாப்ட்வேர் மூலம் சுருக்கி வைத்துள்ள வீடியோ மற்றும்
ஆடியோ பைல்களின் data களை expand செய்து அதை AVI MOTION JPEGஆகவும்.  cd தரத்திற்கு இணையான

பிசிஎம் ஆடியோவாக மாற்றுகிறது.
 

 











 

 

 

 

 


தள முகவரி

http://anetac.com/

 

முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை