13/07/2008

Computer Tips


சாதாரண தமிழ் எழுத்துருக்களை எவ்வாறு இலகுவாக தமிழ்யுனிககோட் எழுத்துருவாக மாற்றுதல்

ஆரம்பகாலங்களில் தமிழில் இணையத்தளங்களை உருவாக்க சாதாரண தமிழ் எழுத்துருக்களை பயன்னடுத்திவந்தனர் (உ+ம் பாமினி அடானா அகராதி என பல்வேறு தமிழ் எழுத்துருக்கள்)                அதனால் நீங்கள் தமிழில் இணையப்பக்கங்களை பார்க்கவேண்டுமெனில் அவர்கள் எந்த தமிழ் எழுத்துருவைப்பயன்படுத்தி இணையத்தளத்தை உருவாக்கினார்களோ அந்த தமிழ் எழுத்துரு உங்கள் கணனியில் இருக்கவேண்டும்.அல்லது இணையத்தளத்தை உருவாக்கியவர்கள் அந்த தமிழ் எழுத்துருவை இணைத்திருப்பார்கள்.நீங்கள் தரவிறக்கம்செய்து உங்கள் கணனியில் நிறுவியபின்னர்தான் தமிழ் எழுத்துருதோன்றும்.

பிற்காலங்களில் பிரபல்யமான இணையத்தளங்கள் இணையநெயர்கள் சிரமமின்றி தமிழில்இணையப்பக்கங்களை பார்வையிடுவதற்காக தமிழ்யுனிககோட் எழுத்ததுருவை பல்வேறு பெயர்களில் பயன்படுத்தினர்.இப்பொழுது அநேகமான இணையத்தளங்கள் தமிழ்யுனிக்கோட் எழுத்துருவைப்பயன்படுத்தி இணையத்தளங்களை அமைப்பதனால் நேயர்கள் தமிழ்எழுத்துருவை தரவிறக்கம்செய்து நிறுவவேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது

தமிழ்யுனிக்கோட் எழுத்துருவை தரவிறக்கம்செய்து உங்கள் கணனியில் நிறுவினால் நீங்களும் தமிழில் இணையப்பக்கங்கள் தமிழில் மின்னஞ்சல் தமிழில் உரையாடல் போன்றவற்றை இலகுவாகசெய்யலாம். (எவ்வாறு தமிழ்யுனிக்கோட் எழுத்துருவை பயன்படுத்துதல் இங்கே அழுத்துங்கள)அனேகமான இணையநேயர்களுக்கு இவைபற்றி தெரிந்திருருக்கும்.

  • நீங்கள் ஏற்கனவே சாதாரணதமிழ் எழுத்துருக்களில் (உ+ம் பாமினி அடானா அகராதி என பல்வேறு தமிழ் எழுத்துருக்கள்) எழுதிவைத்துள்ளவற்றை எவ்வாறு யுனிக்கோட் எழுதுருக்கு மாற்றுதல்
     
  • உதாரணமாக நீங்கள் சாதாரண தமிழ் எழுத்துருவான Adaana வைப்பயன்படுத்தி Ms Word ல் கடிதமொன்றை எழுதியுள்ளீர்கள் அந்தக்கடிதத்தை உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்ப விரும்புகின்றர்கள் (உங்கள் நண்பரிடம் Adaana எழுத்துரு இல்லை என்று வைத்துக்கொள்வோம். PDF பயன்படுத்தலாம் அதுவேறு)
     
  • படம் 1 ல் உள்ளதுபோல Adaana வைப்பயன்படுத்தி Ms Word ல் எழுதிய எழுத்துக்களை தெரிவுசெய்து Bearbeiten / Kopieren செய்க

    படம் 1
     
  • பின்னர்  http://www.suratha.com/reader.htm  இந்த இணையத்தள சுட்டியை அழுத்துங்கள் (அங்கும் போதியவிளக்கம் தந்துள்ளார்கள்) படம் 2 ல் உள்ளதுபோல அந்த இணையப்பக்கம் திறக்கும். அதில் படம் 2 ல் உள்ளதுபோல வலதுகிளிக்செய்து kopieren செய்த எழுத்துக்களை Einfügen செய்க


    படம் 2
     
  • பின்னர் Bamini வடிவில் தமிழ்யுனிக்கோட் எழுத்துரு தேவையெனில் முன் கிளிக்செய்யுங்கள் படம் 3 ல் சீழ்பகுதியில் பாமினி யுனிக்கோட் வடிவில் மாறியுள்ளதை கவனிப்பீர்கள்

    படம் 3
     
  • அவற்றை தெரிவுசெய்து பிரதியெடுத்து உங்களுக்கு விரும்பிய இடத்துக்கு Einfügen செய்து பயன்படுத்தலாம்

(குறிப்பு: Ms Word Program ல் மட்டுமல்ல வேறு Program களிலும் சாதாரண எழுத்துருவைப்பயன்படுத்தி எழுதியவற்றையும் இந்தமுறையில் யுனிக்கோட் தமிழ்எழுத்துருவாக மாற்றலாம்)