பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவற்றில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் தான். இத்தளத்திற்கு தற்போது மாதம் நூறு கோடிபயனாளர்கள் வருகை தருகிறார்கள். வீடியோக்களை பகிர உதவும் யூடியூப் தளத்தில் புகைப்படங்களை பகிரலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. நமது புகைப்படங்களை Slideshow வீடியோவாக பகிரும் வசதியை யூடியூப் தருகிறது.
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில் (Reply) தர முடியும்.
இணைய உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் வழங்கிவரும் சேவைகளுள் Google Translate சேவையும் அடங்கும்.பல்வேறு மொழிகளுக்கான இச்சேவையினை இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியுமாயினும் தற்போது அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவதற்கான மொழிகளுக்கான பொதி (Language Packages) வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.