Home » Computer

Blogger in Draft சேவையை நிறுத்தியது கூகுள்

admin on May 31, 2012

பிளாக்கர் வலைபூக்களை பதிவர்களுக்கு Blogger in Draft வசதியை பற்றி தெரிந்திருக்கும். பிளாக்கர் நிறுவனம் ஏதேனும் புதிய வசதியை அறிமுக படுத்தினால் சோதனை ஓட்டமாக முதலில் Blogger in Draft தலத்தில் தான் அறிமுகப்படுத்தும். பின்பு பதிவர்களிடம் இருந்து வரும் குறைகளை சரி செய்து பின்பு அனைவருக்கும் புதிய சேவையை வழங்கும். இப்பொழுது Blogger in Draft சேவையை நிறுத்தி விட்டது கூகுள் நிறுவனம். இனி Blogger in Draft தளத்தில் எந்த பதிவும் வெளிவராது என அறிவித்து உள்ளது.

கூகுள் தனது புதிய தயாரிப்பான கூகுல் பிளஸ் சேவையை பிரபலமாக்குவதில் முழு மூச்சாக உள்ளது. அதற்காக சில தளங்களை மூடவும் செய்தது. முதலில் Buzz அடுத்து பிக்னிக் இப்பொழுது Blogger in Draft. இனி நீங்கள் பிளாக்கரில் வரும் புதிய வசதிகளை அறிய வேண்டுமானால் www.buzz.blogger.com என்ற தளத்திலும் அதனுடைய கூகுள் பிளஸ் Blogger on Google+பக்கத்தை தொடர்வதாலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

சமூக தளங்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த வரிசையில் மைக்ரோசாப்டும் தன பங்குக்கு so.colஎன்ற சமூக இணையதளத்தை அறிமுக படுத்தி உள்ளது. இதை பிரபல படுத்த நோக்கில் விண்டோஸ் இயங்கு தளம் உபயோகிக்கும் அனைவரும் இந்த புதிய சமூக இணைய தளத்தை கட்டாயம் உபயோகிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடும் போலிருக்கே.

கூகுளின் அறிவிப்பை காண – http://bloggerindraft.blogspot.in
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!Add to Yahoo!

Leave a Reply:

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|